Wednesday, 11 December 2013

நம்மை நாமே எமாத்திக்கிறோமோ.

                 
                 
                    கொஞ்ச நாளாவே நம்ம `தொல்லை`காட்சி பெட்டியில எப்போ பார்த்தாலும் ரஜினி மயமா இருக்குது. அந்த மணுசனுக்கு நாளைக்கு பிறந்தநாளாம். பாட்டு நிகழ்ச்சி, ஆட்ட நிகழ்ச்சினு எல்லாம் அவரபத்திதான்.
                     விளம்பர இடைவெளி அப்பகூட வந்து, ஆண்டவா எல்லாரும் சந்தோசமா இருக்கனும் நிம்மதியா இருக்கனும்னு வேண்டுறாரு.
                     இன்னைக்கு ஒரு சுதந்திர வீரருக்கு பிறந்த்த நாளாம். எனக்கு சாயங்காலம் முகனூல் மூலமாகதான் தெரிந்தது. நேத்து சாயங்காலம் கூட இத பத்தி யாரும் பேசல. ஆன ரஜினி பத்தி ஒரு வாரம் பேசுறாங்க.
                     இத்தனைக்கும் அந்த கவிஞர் வெறும் கவிஞர் மட்டும் இல்லையாம்,
நிறைய மொழி தெரியுமாம், பெரிய எழுச்சி நாயகராம் சமுதாயதுக்கு நிறைய செய்தாறாம், பெரிய புரட்சிகாரராம், அந்த காலத்துலயே ஒருமைப்பாடு பத்தியெல்லாம் பேசுனாராம் (எல்லாம் இன்னைக்கு முகனூலில் படித்தது).
                      இப்போ எனக்கு என்ன கேள்வினா?... சினிமாவுக்கு அப்பார்பட்டு...... அதாவது அதவிட்டு வெளியே வந்தா, நாம(நானும்தான்) நம்ம ஆளபத்தியே இவ்ளோ கேவளமா மறந்துட்டோமே.
                      அப்போ எதுக்கு எதோ அரசியல் தெரிஞ்சிட்ட மாதிரியும் அதுல ஞானம் வந்த்துட்ட மாதிரியும் கெஜ்ரிவால்... கெஜ்ரிவால்னு. வடநாட்டு அரசியல் மாற்றத்துக்கு சந்தோசப்படுறோம். நானும் உக்காந்து எழுதிகிட்டு இருக்கேனே இதெல்லாம் என்ன சொல்றது. ஒரு வேள சந்தானம் சொல்ற மாதிரி நம்மை நாமே எமாத்திக்கிறோமோ. இந்த பாரதியை மறந்த மாதிரிதானே நாம எதிர்காலத்துலயும் இப்போ பேசுர ஆள மறந்துட்டு இன்னோரு நடிகர் பிறந்த்த நாள கொண்டாட போறோம். அப்புறம் நாட்ட யாரு ஆண்ட நமக்கு என்னயா, கவுண்டமனி சொன்ன மாதிரி நமக்கு எது தெரியுமோ அத மட்டும் செய்வோம். தெரியாததை செஞ்சி நாமும் குழம்பி மத்தவங்களையும் குழப்ப வேண்டாம். தயாராகுங்கயா ரஜினி பிறந்த நாளுக்கு.

வாசிப்பவர்களை வேண்டுகிறேன்: எதோ தோன்றியதை எழுதிணேன் எதையும் பெருசா எடுத்துக்காதிங்க

                         

No comments:

Post a Comment