ஒரு நாள் விடியறதுக்கு
முன்னாடி ஒன்னு நடக்குது, அது நடந்ததால ஒருத்தன் செத்துடுரான், அவனோட மகன் கடுப்பு
ஆயிடுரான். அதுக்கு காரணமான ஒருத்தன 24 மணி நேரத்துல இதை செஞ்சவங்கள கூட்டு வந்துரு. இல்லனா, உண்ண தீத்துருவன்னு சொல்லுறான்.
அந்த ஆளும், அந்த சம்பவம் என்னனு தெரியாம பிரச்சனயை தீக்கவும் முடியாம திண்டாடுறான்.
இடைவேலை வரைக்கும் படம் இப்படிதான் போகுது.
அதுக்கு அப்புறம்தான்,
அந்த சம்பவம் என்ன, அதை செய்த அப்பாவிகளான பூஜா மற்றும் குழந்தை நட்சத்திரம் மாளவிகா
இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்று அந்த சம்பந்தபட்ட ஆள் (நடிகர் பெயர் அமரேந்த்ரன்)
ஜான் விஜய் உதவியோடு கண்டுபிடிக்குறாரு. கண்டுபிடிச்சி அவருக்கு கெடு கொடுத்தவரான வினோத்
கிஷானிடம் கொண்டு சேர்கிறார்கள். அதுவரைக்கும் வில்லனா இருந்தவர் (வினோத் கிஷான்) திடீர்னு
ஹீரோ ஆயிடுறாரு. அது எப்பிடியா திடிர்னு மாறுவாருனு நாம கேக்குரதுக்கு முன்னாடியே அவங்களே
சொல்லிடுறாங்க, அவரு முதல்ல இருந்தே ஹீரோ தானாம்.
அவரோட அப்பா சிறுமிகளை
கொடுமை படுத்தும் கொடூரனாம். அவனிடம் மாளவிகாவை மாட்டிவிடுபவர்தான் அமரேந்த்ரன். பூஜா
மற்றும் மாளவிகாவை காப்பற்றவும், அமரேந்த்ரன் மற்றூம் ஜான் விஜயை கொல்லுவதற்கும்தான்
இவ்வளவும் வினோத் கிஷான் செய்தார் என்று திருப்பதோடு படத்தை முடித்துவிடுகிறார்கள்
படத்தில் நடிப்பில்
தனியாக தெரிவது ஜான் விஜய்தான்.
இரண்டு பேர் தன்னை
எதிர்க்க துனிந்துவிட்டார்கள் என்று தெரிந்த பின்னும் அவர்களை கொஞ்ச தூரம் கூட்டி சென்று
வேறு இடத்தில் கொல்வதும், அங்கு செல்லும் வரை அவர்கள் சும்மா இருப்பதும் தருக்கமாக
இல்லை.
ஒரே ஒரு சந்தேகம்,
படத்துல இசைக்கு அவ்வளவு பெரியதாக ஏதும் இடஒதுக்கீடு இருக்குறதா தெரியல, அப்புரம் எதுக்கு
இதை Auro 3D-ல் எடுத்திருக்கிறார்கள்
வாசிப்பவர்களை வேண்டுறேன்: தமிழில்
பிழை இருந்தால் மன்னிக்கவும்
No comments:
Post a Comment