Monday, 23 December 2013

என்றென்றும் புன்னகை




ஒரு ஓவியரோட பையன் ஜீவா. அவருக்கு சின்ன வயசுல அம்மாவ புடிக்கல. அதனால பொண்ணுனாலே புடிக்காம போகுதாம். இதையெல்லாம் மாத்துறதுக்காக நாசர்(அப்பா) அவர சென்னை கூட்டு வர்றாரு.
            புது ஸ்கூல், புது நண்பர்கள், முதல் நாள் ஸ்குல் போகும்போது ரெண்டு பேரு முட்டி போட்டு நிக்குறாங்க. அதுல ஒருதன். ஆசிரியயை ய பாத்து குண்டு மிஸ் னு சொல்றான். நாம கணிச்ச மாதிரியே அவன்தான் சந்தானம்.
            அதுல இருந்து இடைவேளை வரை படம் சந்தானம் கையிலதான்.
            அந்த ஸ்கூல் காட்சி முடிஞ்ச உடனே மூணூ பேரும் ஒரெ பாட்டுல வளந்து பெருசா ஆயிடுவாங்க. அந்த வளரும் நேரத்துல நடந்த ஒரு தப்புக்காக் ஜீவா நாசரிடம் பேசுவதையே நிருத்துகறார்.
            ஜீவாவுக்கு இன்னும் பொண்ணுனா புடிக்காது. அவருக்காக மத்த ரெண்டு பேரும் (சந்தானம், விநய்) அதே மாதிரி இருப்பாங்க. முதல் பாதி முழுதும் மூன்று பேர் செய்யும் நகைச்சுவை தான். சில இடத்துல சந்தானம் குறைச்சு பேசிருக்கலாம்.
            திடீர்னு மூனு பேரும் பிரிஞ்சிருவாங்க, உடனே இடைவேளை.
            இடைவேளை முடிஞ்சு வந்தா, திரிஷாவோட காதல், ஆண்ட்ரியாகூட சண்டனு பயங்கர மொக்கயா போகுது.
            அப்புறமா அப்பாவ பதியும் நண்பர்களை பத்தியும் சில விஷயம் தெரிந்ததும் மீண்டும் அவர்களோடு ஜீவா சேருவதுதான் இரெண்டாம் பாதி. கடைசி அரை மணி நேரம் ரொம்ப நல்ல எடுத்துருக்காரு இயக்குனர்.
படம் ஆரம்ப்பத்தில் நகைச்சுவை, இடையில் மொக்கை, கடைசியில் பாசம்



No comments:

Post a Comment